ஐரோப்பா

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்யருக்கு மன்னிப்பளித்த அதிபர் புடின்

உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத்தண்டனையை விளாடிஸ்லாவ் கன்யூஸ் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார்.

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து, 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார். பின்னர் அவர் ஒரு கேபிள் இரும்பினால் குறித்த பெண்ணின் கழுத்தை நெரித்து, இறுதியில் அவளைக் கொன்றுள்ளார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 7 முறை பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Putin pardons murderer who stabbed ex-girlfriend 111 times while raping and  torturing her to death for 3½ hours - because he fought in Ukraine:  Victim's mother blasts decision to free 'scum' |

கன்யூஸ் ரஷ்ய ராணுவ வீரர் என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கன்யூஸ் விடுவிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து, கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் எல்லைக்கு கன்யூஸ் மாற்றப்படும் தகவலை சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கன்யூஸ் மன்னிக்கப்பட்டார் எனவும், அவரது தண்டனை ஏப்ரல் 27 அன்று ஜனாதிபதி ஆணை மூலம் நீக்கப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்