ரணில் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் குறித்து அறிந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று காலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
அமைச்சரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“கட்சி செயல்பாடுகள் மற்றும் அப்பகுதியில் எந்தப் பணியாக இருந்தாலும் அதை முன்னின்று நடத்தும் அமைச்சராக இருந்தார். எனவும் தெரிவித்துளளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.