பிரதீப் ரங்கனாதனின் புதிய படம் தொடர்பான புதிய அப்டேட்…
‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது நடிகாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கனாதன்.
‘லவ் டுடே’,’டிராகன்’,’டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






