பொழுதுபோக்கு

ரெட் கார்டுடன் பிரதீப் கொண்டாட்டம்… ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

பிக்பாஸிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவருகிறது.

இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை. இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்பதை நோக்கியே நகர்த்தினார்.

நான் இப்படித்தான் இருப்பேன் இதற்காகத்தான் விளையாடுகிறேன் என்று ஓபனாக பேசிவிட்டே விளையாட செய்தார்.

சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த டாஸ்க் ஒன்றில் கூல் சுரேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவரிடம் கோபமாக பல வார்த்தைகளை பேசினார். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் அவரோ தான் இப்படித்தான் பேசுவேன் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

அதனையடுத்து கமல் ஹாசனிடம் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பி பிரதீப் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

முக்கியமாக அவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கெட்ட வார்த்தை பேசுகிறார். கதவை திறந்து வைத்துக்கொண்டு கழிவறை செல்கிறார் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்