கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் திரண்ட மக்கள்!
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் நேற்று (17.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமட் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் ஒன்று திரண்டுள்ளனர்.
கொலம்பியாவின் தேசிய புவியியல் சேவை இரண்டாவது நிலநடுக்கத்தை 5.6 ரிக்டர் அளவில் மதிப்பிட்டுள்ளது,
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள ஜன்னல்கள் சேதமடைந்தன. அருகிலுள்ள வில்லாவிசென்சியோவிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
(Visited 5 times, 1 visits today)