இலங்கை வந்தார் பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார்
பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்தார்.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வந்த இவர், நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவரது வருகை உள்ளது.
சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார்.
அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை, சரத்குமாரின் மனைவி ராதிகா இலங்கையர் ஆவார். அவருடைய தாயார் ஒரு சிங்களப் பெண்மணி.
மேலும், மட்டக்களப்பில் ராதிகாவுக்கு ஒரு சுற்றுலா விடுதியும் உள்ளது.
இவர்கள் இருவருக்கும் இலங்கை புதிய இடம் அல்ல. என்றாலும் இம்முறை அரச விஜயமாக சரத்குமாரின் வருகை உள்ளமை குறிப்பிடத்தக்கது.




