கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் லியோ
கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு போப் லியோ(Pope Leo) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், “குறைந்தபட்சம் நமது இரட்சகரின் பிறந்த நாளிலாவது நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நாளை அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது” என்று ரோம்(Rome) அருகே உள்ள காஸ்டல் காண்டோல்போவில்(Castel Gandolfo) உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.





