5 கோடி கேட்ட பூஜா ஹெக்டே… அடுத்து நடந்த டுவிஸ்ட்…
பூஜா ஹெக்டே இப்போது பிஸியான நடிகைகளில் ஒருவர். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய அவர் அடுத்ததாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படம் ஃப்ளாப் ஆனாலும் அம்மணிக்கு தொடர்ந்து கோலிவுட் கதவுகள் திறந்தன.
அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற கன்னிமா பாடலுக்கு அவருடன் நடனமாடி ஒட்டுமொத்த தமிழ்நாடும் வைப் செய்தது.

அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.
இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும் ஹீரோயினாக கமிட்டானார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. படத்தின் வேலைகள் மும்முரமாக தொடங்கியிருக்கின்றன.

இதில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட பூஜாவை அணுகியதாகவும், அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் கேட்ட தொகையை கொடுக்க படக்குழு ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.






