பொங்கல் வின்னர் யார்? கேம் சேஞ்சர் vs வணங்கான் vs மதகஜராஜா…
2025ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் பல படங்கள் குவிந்தன. அப்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், விஷால் நடித்த மதகஜராஜா ஆகிய மூன்று படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகி உள்ளன.
இதில் கேம் சேஞ்சர் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே இவர்கள் இருவருக்கும் கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்தியன் 2 படத்தோடு ஒப்பிடுகையில் கேம் சேஞ்சர் எவ்வளவோ பரவாயில்லை என்கிற பேச்சும் உள்ளது. அதேபோல் பாலா படம் என்றால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் வணங்கான் படம் தாக்கத்தை ஏற்படுத்தாதது மட்டும் ஒரு நெகடிவ்வாக உள்ளது. இருந்தாலும் அவருக்கு ஒரு கம்பேக் படமாக வணங்கான் நிச்சயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், இந்த பொங்கல் ரேஸில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து வெற்றியை தட்டிச் சென்று இருக்கிறது மதகஜராஜா திரைப்படம்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்த இப்படம் பக்கா பொங்கல் ட்ரீட்டாக வந்துள்ளதாக படம் பார்த்த அனைவரும் கூறி வருகின்றனர். இதனால் ஒரிஜினல் பொங்கல் வின்னராக மதகஜராஜா மாறி இருக்கிறது.
சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்துமுடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சனையால் சுமார் 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் இன்று பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ் சினிமா வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனை 4 படம் மூலம் முதல் 100 கோடி வசூல் படத்தை கொடுத்த சுந்தர் சி. 2025-ன் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மதகஜராஜாவை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறி வருகிறது.