ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’… புதிதாக இணைந்த 2 புதிய படங்கள்
அஜித் நடித்து வந்த, ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறுவதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த நிலையில், தற்போது இரண்டு புதிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்ததி இருந்தாலும், சில வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வழிவகுத்துள்ளது.
அதன்படி நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ என்கிற திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இது 10 மணி நேரம் நடக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இதற்கு முன்பு சிபிராஜ் நடித்த திரைப்படங்களை விட மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சிபிராஜ் ஒரு பஸ் டிரைவராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக வர வெளியாகிறது.
இதை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ஷானி நிகம் ஹீரோவாக தமிழில் அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் நிஹாரிகா, கலையரசன், கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள நிலையில், ஜெகதீஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகா உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.