ஐரோப்பா

பிரான்ஸில் இரு சீன உளவாளிகளை சுற்றி வளைத்த பொலிஸார்!

பிரான்ஸில் இரண்டு சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்டியாக்ஸிலிருந்து  (Bordeaux) சுமார் 15 கிமீ (9 மைல்) தொலைவில் உள்ள கேம்ப்ளேன்ஸ்-எட்-மெய்னாக் (Camblanes-et-Meynac) பகுதியில் உள்ள தோட்டத்தில் மிகப் பெரிய ஆண்டெனாவை (antenna) அமைத்தபோது குடியிருப்பாளர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பொது இயக்குநரகம் (DGSI) ஏஜென்சியின் அதிகாரிகள் அவர்களின் வீட்டை சோதனை செய்தபோது ஏராளமான கணனிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் மீது “வெளிநாட்டு சக்திக்கு தகவல்களை வழங்குதல், தகவல் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!