அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்மீது நாயை ஏவிவிட்ட பொலிஸார்!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போக்குவரத்து சோதனையின் போது, கருப்பின இளைஞரை காவல்துறையினர் நாயை கொண்டு கடிக்க வைத்து கைது செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 4ம் திகதி நடைபெற்ற இந்த மனிதாபிமான மற்ற காணொளி வெளியாகி அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
23 வயதான ஜடாரியஸ் ரோஸ் என்ற கருப்பின இளைஞர் ஓட்டி வந்த கனரக வாகனத்தை ஓஹியோ மாகாண பொலிஸார் நிறுத்தக் கோரிய போது, அவர் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றதுஇதனையடுத்து வாகனத்தை துரத்திச் சென்ற ஓஹியோ காவலர்கள் அதனை கொலம்பஸுக்கு அருகே உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர்.
வாகனத்தில் இருந்து ஜடாரியஸை கீழே தள்ளிய காவலர்கள், அவருக்கு கை விலங்கிட முற்பட்டனர். அப்போது சக காவலர்கள் ஒருவர் மோப்ப நாயை கட்டவிழ்த்து விட்டு, கருப்பின இளைஞர் ஜடாரியஸ் ரோஸை தாக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இளைஞர் மீது பாய்ந்த நாய் அவரை கடித்து குதறிய நிலையில் நாயை பிடியுங்கள் என்று இளைஞர் கதறுவதும் காவலர் நாயை பிடிக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகின்றது.
இந்த செயலுக்கு காரணமாக ஓஹியோ காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.