அமெரிக்காவில் விமானம் தீப்பிடித்து விபத்து! 3 பேர் பலி – பலரின் நிலை கவலைக்கிடம்
அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky) உள்ள லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் (Louisville International Airport) ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய இறப்பு எண்ணிக்கை மூன்று என்றாலும், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் (Andy Beshear) கூறினார்.
இந்த விபத்து, யுனைடெட் பார்சல் சர்வீஸால் (United Parcel Service – UPS) இயக்கப்படும் மெக்டோனல் டக்ளஸ் MD11F (McDonnell Douglas MD11F) சரக்கு விமானம் ஆகும்.
விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.
வீடியோ காட்சிகளின்படி, விமானத்தின் இடது இறக்கையில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வருவதைக் காண முடிந்தது.
விபத்து நடந்த இடம் ஒரு போர் மண்டலம் போல் தோன்றியது என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தைப் பாதுகாப்பாக மாற்ற எவ்வளவு நேரம் ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று லூயிஸ்வில் காவல்துறைத் தலைவர் பால் ஹம்ப்ரி (Paul Humphrey) கூறினார்.





