திடீரென தீப்பிடித்த விமானம் – நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கம்
அவுஸ்திரேலிய விமானம் ஒன்று நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் குயின்ஸ்டவுனில் இருந்து மெல்போர்னுக்கு புறப்பட்டது, ஆனால் இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்டு விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
(Visited 45 times, 1 visits today)





