பொழுதுபோக்கு

ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் சேதுபதியின் மகன்… டீசரை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் “பீனிக்ஸ்” திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இது திரைப்பட இயக்குனராக அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள நிலையில், பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா விஜய் சேதுபதி, தந்தையின் நிழலில் வளர விரும்பவில்லை என்றும், தனியாக நின்று தன்னால் முடிந்ததை சாதிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

அந்த வகையில் இன்று வெளியான இந்த பட டீசரை கூட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடாத நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!