பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – இதுவரை 69 பேர் உயிரிழப்பு!
மத்திய பிலிப்பைன்ஸில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செபு நகர கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 5 times, 1 visits today)





