உலக அளவில் மேலதிகமாக 41 நாட்களுக்குச் சுட்டெரிக்கும் வெப்பத்தை அனுபவித்த மக்கள்

உலக அளவில் மேலதிகமாக 41 நாட்களுக்குச் சுட்டெரிக்கும் வெப்பத்தை மக்கள் அனுபவித்ததாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித நடவடிக்கைகளால் அந்த நிலை ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
இவ்வாண்டே மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. சில பகுதிகளில் 150 நாட்களுக்கும் மேலாகத் தகிக்கும் வெப்பம் நீடித்தது. அதற்குக் காரணம் பருவநிலை மாற்றமாகும்.
இவ்வாண்டு மட்டும் வானிலை தொடர்பான 29 நிகழ்வுகளில் 26 பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு புவிமண்டலத்தில் அதிக அளவில் கரியமிலவாயு வெளியிடப்பட்டது.
படிம எரிபொருள்கள் அதிகம் எரிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உச்சக்கட்ட நிகழ்வுகள் மோசமாகலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரிவு எச்சரித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)