பிரான்ஸ் போராட்டத்தை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடும் நபர்கள்
பிரான்ஸ் நாட்டில் நஹெல் என்ற 17 வயது சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஏற்பட்ட கலவரம் ஒரு வாரம் கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகிறது.
போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி, அரசு சொத்துக்களை எரித்தும், கடைகளை சூறையாடியும் வருகின்றனர். அண்மையில், சில மர்ம நபர்கள் கார் காட்சியறை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கலவரம் தொடர்பாக பொலிஸார் இதுவரை சுமார் 1000 பேரை கைது செய்துள்ளனர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க 45 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைத்து வருகின்றனர் எனினும் கலவரம் அடங்கவில்லை.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கு மத்தியில் இருக்கும் சிலர் பாரிஸ் நகரின் அனைத்து இடங்களிலும் கடைகளை உடைத்து, கிடைத்ததை கொள்ளையிட்டுள்ளனர்.
சில நபர்கள் நகரில் உள்ள வோக்ஸ்வேகன் கார் காட்சியறையை உடைத்து, அதிலிருந்த விலை உயர்ந்த கார்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.காட்சியறையில் இருந்த அனைத்து கார்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளையர்கள் கார்களை எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது