அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
2 ஆண்டுகளாக நீடிக்கும் காஸா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதிலிருந்து காசா போர் தீவிரம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.