காசாவுக்கான அமைதி வாரிய திட்டம் – 35 நாடுகள் இணைவு : ஐரோப்பிய நாடுகள் மறுப்பு!
காசாவுக்கான “அமைதி வாரியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை டாவோஸில் (Davos) இடம்பெற்றுள்ளது.
இந்த வாரியத்தில் சேர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (Putin) மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளன. புடினின் ஈடுபாடு குறித்த கவலைகளை இங்கிலாந்து காரணம் காட்டியுள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் துருக்கி உட்பட சுமார் 35 நாடுகள் குழுவில் இணைந்துள்ளன.
இதேவேளை 03 வருடத்திற்கு மேல் அங்கம் வகிக்க விரும்பும் நாடுகள் 01 பில்லியன் டொலர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா இதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குழுவின் தொலைநோக்கு பார்வையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது போர்நிறுத்தம் மற்றும் அதிகரித்த மனிதாபிமான உதவிக்கு வழிவகுத்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





