பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கினார்! மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். நடிப்பை தொடர்ந்து, ஜனசேனா என்கிற கட்சி மூலம் அரசியலில் கால் பதித்த இவர், தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார்.
பவன் கல்யாண் ரேணு தேசாய் என்கிற நடிகையை 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் இவர்கள் இருவரும் 1999-ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.
இதை தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், ரேணு தேசாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பவன் கல்யாணும் Anna Lezhneva என்கிற வெளிநாட்டு பெண்ணை 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் மூலம், அகிரா நந்தன் என்கிற மகனும், ஆத்யா என்கிற மகளும் உள்ள நிலையில், Anna Lezhneva மூலமும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
பவன் கல்யாணின் இளைய மகனான மார்ச் சங்கர் பவானோவிச் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் தற்போது படித்து வருகிறார்.
இவர் படித்து வரும் பள்ளியில் எதிர்பாராத விதமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த விபத்தில் மார்க் சங்கர் சிக்கி அவருக்கு கை, கால்களில் தீ காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவரது நுரையீரலுக்குள் புகை புகுந்ததால் அவர் மூச்சு விடுவதிலும் சிரமத்தை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து மார்க் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மகனுக்கு தீ காயம் ஏற்பட்ட தகவலை அறிந்ததும் பவன் கல்யாண் தன்னுடைய ஒட்டு மொத்த பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு, தற்போது மனைவியோடு சிங்கப்பூர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், தென்னிந்திய திரையுலகில் மட்டும் இன்றி சிரஞ்சீவி குடும்பத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பதற்றத்தோடு இருக்கும் பவன் கல்யானுக்காகவும் அவரின் மகன் விரைவில் குணமடைய தங்களின் பிராத்தனைகளை தெரிவித்து வருகிறார்கள்.