இலங்கை செய்தி

கடவுச்சீட்டு மற்றும் விசா விநியோகம் வழமைக்கு

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு காரணமான கணினி அமைப்பிலிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், தற்போது கணினி கட்டமைப்பு முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!