பொழுதுபோக்கு

மறுமணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுவிதமான அணுகுமுறையைக் கையாளும் நபர்களில் நடிகர் பார்த்திபன் முதன்மையானவர்.

புதிய பாதை மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான வழியில் தனித்துவத்துடன் பயணித்துவருகின்றார்.

நடிகை சீதாவை காதலித்து 1990இல் மரம் பிடித்தார்.
இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர்.

சீதா மறுமணம் முடித்திருந்தாலும் பார்த்திபன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

பார்த்திப னின் இரு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் தற்போது மகன் ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், மகன் திருமணம் முடிந்த பிறகு தானும் திருமணம் செய்ய போவதாக தெரிவித்தார்.

இது வைரலான நிலையில் இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

“ வாழ்வில் திருமணம் ஒருமுறை தான். மனைவி என்கிற ஸ்தானமும் ஒருவருக்கு தான். அதில் எப்போதும் தீர்மானமாக இருக்கிறேன்.

மனமாற்றம் ஏற்படுகிற அளவுக்கு புதிதாக ஒன்றும் நிகழவில்லை.

என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கும் என் பையனுக்கு தான் இன்னும் நடக்கவில்லை என நகைச்சுவையாக சொன்ன விடயம் அது.

நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்லவில்லை. இந்த செய்தி வெறும் ரசிப்புக்காக மட்டுமே ” என்று பார்த்திபன் தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!