அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவர்கள் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேலும் இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 04 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)