பாகிஸ்தான் – சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து : 11 பேரின் உடல்கள் மீட்பு!
தென்மேற்கு பாகிஸ்தானில் கடந்த வாரம் ஏற்பட்ட சுரங்க வெடிப்புக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் 11 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தெற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.
சுரங்கப்பாதைகளில் 12 தொழிலாளர்கள் இறந்ததாக நம்பப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)