அரசியல் இலங்கை செய்தி

தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வேண்டும்!

தித்வா புயலினால் ஏற்படும் பேரிடர் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேற்படி குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

“ வளிமண்டளவியல் திணைக்களத்துக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல்கள் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். எனவே, தேசிய அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இழப்புகளை குறைத்திருக்கலாம்.

இந்நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதி செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா, அவ்வாறு தெரியப்படுத்தி இருந்தால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,

தெரியபடுத்தவில்லையெனில் அதற்குரிய காரணம் என்ன என்பன பற்றி ஆராய்வதற்கே மேற்படி தெரிவுக்குழு அவசியம்.” எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!