ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அழைப்பு விடுத்தது தவறான முடிவாகும் என ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா பகுதியில் தொடரும் போர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த இராஜதந்திர அணுகுமுறை தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகை ஆஸ்திரேலிய சமூகத்தில் புதிய பிளவுகளை உருவாக்கக்கூடும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.

எனினும், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஆஸ்திரேலிய பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார்.

சிட்னி போண்டி பகுதியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த தாக்குதலுக்குப் பிறகு, யூத சமூகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதும், அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுவதும் அரசின் கடமை என பிரதமர் Anthony Albanese குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆளும் லேபர் கட்சிக்குள்ளேயே சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்களை நடத்த பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

காசாவில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், இந்த விஜயம் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கும் செயல் என அந்த அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

பிரதமர் Anthony Albanese இந்த விமர்சனங்களை நிராகரித்து, இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகை தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்பை ஆஸ்திரேலியா அனுமதிக்காது என்பதற்கான தெளிவான செய்தியாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!