கட்சி தொடங்கி ஒரு வருசமாச்சி… விஜய் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்த நடிகர் விஜய், 2024ஆம் ஆண்டு ப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சித் தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கட்சியின் நிறுவன நாளுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் நிர்வாக வசதிக்காக 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே மக்கள் நலப் பணிகளையும் தீவிரப்படுத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.