விமானப்படை முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் பலி!
புத்தளம் – கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, கல்பிட்டியில் உள்ள விமானப்படை கள துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் (28) உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





