ஒடிசா ரயில் விபத்து ; ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது ,”உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”. என்று அவர் தெரிவித்து உள்ளார்.
(Visited 16 times, 1 visits today)