தேதி குறிச்சாச்சி… இனி என்ன கல்யாண கொண்டாட்டம் தான்…
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யப் போகிறார்.
சமீபத்தில், திருமண சடங்குகள் நடைபெற்ற புகைப்படங்களை நடிகை சோபிதா துலிபாலா பதிவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி லயன்ஸ் கேட் திறப்பு தினம் எனக் கூறப்பட்ட நாளில் நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், இருவரும் கூடிய சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர். எப்போது அவர்களின் திருமணம் நடைபெற போகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
சமீபத்தில் மும்பையில் முன்னணி பாலிவுட் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற தீபாவளி நிகழ்ச்சியில் நடிகை சோபிதா துலிபாலா அழகான சேலையை உடுத்திக் கொண்டு செம க்யூட்டாக கலந்துக் கொண்டார்.
இந்த ஆண்டு ஏகப்பட்ட பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது. பல நடிகைகளுக்கு குழந்தையும் பிறந்துள்ளன. இந்நிலையில், அடுத்த நட்சத்திர ஜோடி திருமணமாக நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற காத்திருக்கிறது.
திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக இரு வீட்டார் மத்தியிலும் தொடங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக ராஜா வீட்டுத் திருமணம் போல நடைபெறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிசம்பர் முதல் வாரத்திலேயே திருமணத்தை நடத்தப்போவதாகவும் கூறுகின்றனர்.
ஆலியா பட், தீபிகா படுகோன், காஜல் அகர்வால், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்களின் திருமணங்கள் சமீப காலமாக ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழம்பெரும் பிரம்மாண்ட அரண்மனைகளில் நடைபெற்று வரும் நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணமும் அரண்மனையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
சோபிதா தன்னுடைய திருமணம் கிராண்டாக நடைபெற வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.