வட அமெரிக்கா

பராக் ஒபாமாவின் சமையல்காரருக்கு நேர்ந்த துயரம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சமையல்காரர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ஒபாமாவின் வீடு உள்ள Martha’s Vineyard பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

45 வயதாக Tafari Campbell என்ற Paddle Boards எனப்படும் பலகை மிதவையில் சவாரி செய்துகொண்டிருந்தபோது மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்தபோது ஒபாமாவின் குடும்பத்தார் வீட்டில் இல்லை. Campbell தங்களின் குடும்பத்தில் ஒருவர் என்று ஒபாமாவும் அவரின் மனைவியும் தெரிவித்தனர்.

அவர் வெள்ளை மாளிகையில் சமையல்காரராகப் பணியாற்றினார்.

வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும்போது ஒபாமா குடும்பத்தின் சமையல்காரராக வேலை செய்ய அவர் ஒப்புக்கொண்டதாக ஒபாமா தம்பதி கூறினர்.

கேம்பலுக்கு மனைவியும் இரட்டைப் பிள்ளைகளும் உள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!