அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று!
அமெரிக்காவும் ஈரானும் இன்று ஓமானில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.
இதன்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிராந்திய பினாமி நெட்வொர்க்குகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் போன்ற பிற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்று பல தசாப்தங்களாக கூறிவருகிறது. இருப்பினும் மேற்குலக நாடுகள் இது தொடர்பான கவலைகளை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை முன்னெடுத்தது. அப்போதிருந்தே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




