ஜப்பானில் மீளவும் இயக்கப்பட்ட அணுமின் நிலையம் – எச்சரிக்கை ஒலி எழுந்ததால் பரபரப்பு!
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா பேரழிவிற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டன.
காஷிவாசகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணுமின் நிலையத்தில் உள்ள ஆறாவது எண் அணு உலையைத் தொழிலாளர்கள் இயக்கிக் கொண்டிருந்தபோது கண்காணிப்பு அமைப்பிலிருந்து எச்சரிக்கை ஒலி வந்ததாகவும், இதனையடுத்து செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிக்கலை தீர்க்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை எனவும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (Tokyo Electric Power Company (Tepco) தெரிவித்துள்ளது.
உலை நிலையானது என்றும், ஆலைக்கு வெளியே எந்த கதிரியக்க தாக்கமும் இல்லை என்றும் டெப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எவ்வளவு காலம் எடுக்கும் என்று தற்போது சொல்ல முடியாது,” என்று தள கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது என்பதற்கான காரணத்தை அடையாளம் காண முயற்சிப்பதில் நாங்கள் இப்போது முழுமையாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





