தமிழ் – சிங்கள புத்தாண்டு சுப நேரம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசாங்க ஜோதிர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு சுப நேர பட்டியலின் பிரகாரம் எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கான சுப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20 நிபுணத்துவ ஜோதிடர்களைக் கொண்ட அரசாங்க ஜோதிர்கள் குழுவினால் சுப நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
பல்வேறு கருத்துக்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அரச அனுசரணை குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள மங்களகரமான சடங்குகளை நிறைவேற்றுமாறும் அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், அரசாங்க ஜோதிர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரம் அசுபமானது எனக் கூறி, தேசிய ஜோதிர்கள் குழுவாகக் காட்டிக் கொள்ளும் குழு ஒன்று, சிங்களப் புத்தாண்டுக்கான மற்றுமொரு சுப நேர கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது.