அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை – வடகொரியா திட்டவட்டம்!
வட கொரியா தனது அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்களை அதன் “இருப்பு உரிமைக்கு” சமமானதாகக் கருதுவதாகவும் ஐ.நா பொதுச் சபையில் கூறியுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா. பொதுச் சபையில் வட கொரிய அதிகாரி ஒருவர் ஆற்றிய முதல் உரை இதுவாகும்.
இதன்போது வட கொரிய அணு ஆயுதத் திட்டம் ஐ.நா.வால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் தென் கொரியாவுடன் “அதிகார சமநிலையை” பராமரிப்பதற்கு இது இன்றியமையாதது என்று துணை வெளியுறவு அமைச்சர் கிம் சன் கியோ கூறியுள்ளார்.
“நாங்கள் ஒருபோதும் அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம், அது எங்கள் மாநில சட்டம் எனக் கூறிய அவர், இந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் ஒருபோதும் விலக மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும் DPRK மீது அணு ஆயுதக் குறைப்பைத் திணிப்பது இறையாண்மை மற்றும் இருப்பு உரிமையை கைவிடவும் அரசியலமைப்பை மீறவும் கோருவதற்குச் சமம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





