நாசகார போர்க்கப்பலை இரகசியமாக கட்டி வரும் வடகொரியா : கசிந்துள்ள தகவல்!

வட கொரிய கடற்படையை வலுப்படுத்த ஒரு நாசகார போர்க்கப்பலை ரகசியமாக கட்ட அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்த.
இதன்மூலம் அவர் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரியா கிழக்கு கடற்கரையில் இரண்டாவது போர்க்கப்பலை உருவாக்கி வருகிறது. மேற்கு கடற்கரையில் கட்டப்படும் வகுப்பில் முதல் கப்பலை அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
போர்க்கப்பலின் கட்டுமானம் மே 2024 இல் சோங்ஜின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டதாகவும், சுமார் 383 அடி நீளமும் 52 அடி அகலமும் கொண்டதாக நம்பப்படுகிறது.
கட்டுமான இடத்தை உள்ளடக்கிய ஒரு உருமறைப்பு கட்டிடத்தில் இது கட்டப்பட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)