‘பென்ஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த நிவின் பாலி
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “ஜி ஸ்குவாட்” நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, ‘பென்ஸ்’ படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘பென்ஸ்’ திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.





