புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்த நைஜர் தலைவர்கள்
நாட்டில் புலம்பெயர்ந்தவர்களைக் கடத்துவதைக் குற்றமாக்கும் எட்டு ஆண்டுகள் பழமையான சட்டத்தை நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர்கள் ரத்து செய்துள்ளனர்.
நைஜரின் பாலைவனம் வழியாக லிபியா மற்றும் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோரை கடத்திய கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது.
ஆனால் மத்தியதரைக் கடல் முழுவதும் மக்கள் பாய்வதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி மொஹமட் பாஸூம் ஜூலை மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் தூக்கியெறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானி தன்னை புதிய அரச தலைவராக அறிவித்தார்.
“நைஜர் மற்றும் அதன் குடிமக்களின் நலன்களை இந்த சட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை” என்று அவரது ஆளும் ஆட்சிக்குழு ஒரு அறிக்கையில் ரத்து செய்வதை அறிவித்தது.
2015 சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகள் “அழிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.