ஐரோப்பா

பணத்தை மிச்சப்படுத்தும் NHS இன் முயற்சி – காத்திருப்பு பட்டியலில் அறுவை சிகிச்சை நோயாளிகள்!

NHS பணத்தை மிச்சப்படுத்த முயற்சிப்பதால் அறுவை சிசிக்சைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தாமதத்தை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் நிர்ணயித்துள்ள வரவு செலவு திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டியுள்ளதால், NHS வாரியங்கள் நடைமுறைகளை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது புதிய நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நடைமுறைக்கு வரும் வரை நோயாளிகள் தாமதங்களை சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் (Wes Streeting) தற்போது 7.3 மில்லியன் சிகிச்சைகளைக் கொண்ட NHS காத்திருப்பு பட்டியலைக் குறைப்பதை அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளார்.

ஆனால் அந்த முயற்சி இங்கிலாந்து முழுவதும் ஒருங்கிணைந்த பராமரிப்பு வாரியங்களால் தடைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் சுமார் 42 பராமரிப்பு வாரியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!