தனது குழந்தைகளை கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண் – நீதிமன்றத்தின் தீர்ப்பு!
தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேசில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹக்கியுங் லீ (Hakyung Lee) என்ற அந்தப் பெண், தனது கணவர் புற்றுநோயால் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
எட்டு வயதான யூனா ஜோ (Yuna Jo) மற்றும் ஆறு வயதான மினு ஜோ(Minu Jo) ஆகிய இரண்டு குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த உடனேயே பைத்தியக்காரத்தனத்தால் இந்தக் கொலைகளைச் செய்ததாக குறித்த பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஹக்கியுங் லீ, பிணைக்கு தகுதி பெறுவதற்கு முன்பு குறைந்தது 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




