உலகம்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!

நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையில், நிலையானதொரு அரசாங்கத்தை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்படுகின்றது என அவர் கூறினார்.

55 வயதான நியூசிலாந்து பிரதமர் அரசியல் களத்துக்கு வந்து குறுகிய காலப்பகுதியிலேயே உச்சம் தொட்டவர்.

2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் வந்த அவர், 2021 இல் கட்சி தலைவரானார். அதன்பின்னர் 2023 இல் பிரதமர் பதவிக்கு தெரிவானார்.

எனினும், பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை வீதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு சரிந்துள்ளது.

இந்நிலையிலேயே மக்கள் ஆதரவை நாடி பிடித்து பார்க்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!