இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய விசா விதிகள் அறிமுகம்

பிரித்தானிய அரசாங்கம் இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது, என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் கீழ், வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களை பராமரிக்க வரும் வெளிநாட்டு வேலைநிறுவன ஊழியர்களுக்கான விசா முற்றிலும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. பட்டப்படிப்புக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான காலக்கெடு குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேடாக, வெளிநாட்டு வேலைக்காக வந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Indefinite Leave to Remain) பெற 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் தேவையாகும் வகையில் மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், பணி விசா வைத்திருப்பவர்களின் குடும்பத்தினருக்கான ஆங்கில மொழித் தேர்வுத் தகுதியை கடுமைப்படுத்த இந்த ஆண்டு முடிவுக்குள் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், பிரித்தானியாவில் புலம்பெயர்வை குறைக்கும் நோக்கில் செய்யப்படும் முக்கிய நடவடிக்கைகளாக அரசாங்கம் விளக்கியுள்ளது.

(Visited 89 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்