இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதற்காக புதிய சட்டம்
இலங்கையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்ட புதிய வர்த்தமானியை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
குறைந்தபட்ச வேக வரம்பு உள்ளிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“தனிப்பட்ட பண்புகள் இன்றி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் பாதுகாப்பு தொடர்பான புதிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய வர்த்தமானி இரண்டு வாரங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவதே விபத்துக்களுக்கு காரணமாகும்.
மேலும், தேவையான வேகத்தை விட குறைவான வேகத்தில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயலும்போது ஏற்படும் விபத்துகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, தனி நபர் வேறுபாடின்றி அனைவராலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அமைப்பு மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.