ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை மீண்டும் தாமதம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை முறைமை, அறிமுகம் மீண்டும் தாமதமாகியுள்ளது.

டோவர் துறைமுகம் மற்றும் யூரோடன்னல் (Dover and Eurotunnel) வழியாக பயணம் செய்யும் பிரித்தானிய பயணிகளிடம், புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படவிருந்தது.

ஆனால், “நுழைவு அமைப்பு” எனப்படும் EES முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்துவருவதால்,
இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதி கிடைத்த பின்னர், முழுமையான பயோமெட்ரிக் சோதனைகள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பை அதிகரிக்கவும், விசா காலத்தை மீறி தங்குவதைத் தடுக்கவும் இந்த EES முறைமை ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் பயணிகள் எல்லைச் சோதனைகளில் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!