பொழுதுபோக்கு

40ஐ நெருங்கும் வயது… பிரபல ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் டிராப் ஆன நிலையில், அந்தக் கதையை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்க உள்ளாராம் விக்கி.

இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர இயக்குனர் மிஸ்கின், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.

See also  சூர்யா - ஜோதிகாவின் மகள் செய்துள்ள சாதனை - குவியும் பாராட்டு

இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்க உள்ள கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தன்படி பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக இப்படத்தில் நடிக்க உள்ளாராம் நயன். ஹீரோயினாக மவுசு குறைந்ததால் அவர் இப்படி அக்கா வேடங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content