மீண்டும் மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் இணையும் நயன்தாரா
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் சிரஞ்சீவி நடிக்கும் ‘Mana Shankara Vara Prasad Garu’ படத்தில் நயன்தாரா நடிக்கின்றார்.

பாலகிருஷ்ணா தற்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.
‘அகண்டா 2‘படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார்.
வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்கும் 4-வது படமாக இது இருக்கும். முன்னதாக ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலகிருஷ்ணாவும் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






