பொழுதுபோக்கு

“இவங்கதான் லேடி சூப்பர்ஸ்டார்” கமல்ஹாசன் அதிரடி பேச்சு… அப்போ நயன் யாரு?

நடிகை நயன்தாரா இன்று சினிமாவில் எந்த நடிகையும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகையாகாது.

தற்போது அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு திரையுலகத்தில் மேலோங்கி நிற்கிறார். நிறைய ஹிட் படங்களை கொடுத்து, நிறைய முன்னணி நடிகர்களுடன் நடித்து அதே இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.

தற்போது கமல்ஹாசன் ஒரு விழாவில் பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா அவர்களுக்கு அவார்டு கொடுக்கும் போது, வைஜயந்தி மாலா அவர்களை இந்திய அளவில் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் எனக்கு தெரிஞ்சு இவங்கதான் என்று வைஜயந்தி மாலா அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகத்தான் இருந்திருக்கிறார் வைஜெயந்திமாலா.

இந்திய காங்கிரஸ் கட்சியில், திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி என இவரது அரசியல் பயணமும் பெரிது.

ஆகவே கமல்ஹாசன் அப்போது உள்ள காலகட்டத்தில் இவர்தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும். அது மட்டுமல்லாமல் இந்திய அளவில் இவர் தான் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் வைஜெயந்தி மாலா அவர்களை புகழ்ந்துள்ளார்.

இவருக்கு விருது கொடுப்பது எனக்கு பெருமை என்றும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் நான் சென்று விட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன் இவ்வாறு வைஜெயந்திமாலா அவர்களை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

பொதுவாகவே இந்த “சூப்பர் ஸ்டார்” பட்டத்திற்கு நடிகர்களும் நடிகைகளும் அடித்துக்கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content