ஐரோப்பா

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க ஜெட் விமானங்களை அனுப்பும் நேட்டோ!

நேட்டோ ‘ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க’ கண்காணிப்பு ஜெட்களை அனுப்புகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேட்டோ கூட்டணியின் எல்லைக்கு அருகே உள்ள லிதுவேனியாவிற்கு கண்காணிப்பு ஜெட் விமானங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AWACS எனப்படும் ஜெட் விமானங்களை அனுப்பவுள்ள நிலையில், இந்த ஜெட் விமானங்களால்,  நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிய” முடியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

“உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர், பால்டிக் கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழலில் எங்கள் கவனத்தை அதிகரித்துள்ளது” என்று நேட்டோவின் செயல் தொடர்பாளர் டிலான் வைட் கூறியுள்ளார்.

கடந்த வாரம், நேட்டோ எல்லைக்கு அருகே ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களை அடுத்து, நேட்டோவின் விமானக் காவல் பணியை மேம்படுத்துவதற்காக நான்கு கூடுதல் F-16 போர் விமானங்களை ருமேனியாவிற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்