நமீபியாவில் பற்றி எரியும் தேசிய பூங்கா – களத்தில் இறங்கிய 500 தீயணைப்பு வீரர்கள்!
நமீபியாவில் பிரபலமான தேசிய பூங்காவின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனை அணைக்க 500 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எட்டோஷா தேசிய பூங்கா முழுவதும் தீவிபத்தில் எரிந்து நாசாமாகியுள்ளதாகவும், பல விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா நூற்றுக்கணக்கான வனவிலங்குகளுக்கு தாயகமாக உள்ளது, அவற்றில் மிகவும் அழிந்து வரும் கருப்பு காண்டாமிருகங்களும் அடங்கும்.
பூங்காவின் புறநகரில் உள்ள கிராமங்களிலும் தீ பரவியதாகவும், ஆனால் மனித உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
8,600 சதுர மைல் (22,200 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காவில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் தோராயமாக 30% அழிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





